ஸ்டம்பை பார்க்காமல் தோனியை விட மிரட்டலாக ரன்அவுட் செய்த விக்கெட் கீப்பர்! மிரண்டுபோன இலங்கை வீரர் (வீடியோ)
இலங்கை வீரர் தசுன் ஷானகாவை வங்கதேச விக்கெட் கீப்பர் ரன்அவுட் செய்த வீடியோ ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இலங்கையின் தசுன் ஷானகா அதிரடியில் மிரட்டினார்.
We've seen a similar one. But this is classic 2.0!
— FanCode (@FanCode) March 10, 2024
.
.#BANvSL #FanCode @LittonOfficial pic.twitter.com/HKUVZ53Py0
அவர் 9 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ரிஷாட் ஹொசைன் எறிந்த பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் லித்தன் தாஸ், ஸ்டம்பை பார்க்காமலேயே தோனியை விஞ்சும் அளவுக்கு ரன் அவுட் செய்தார்.
இந்த ரன்அவுட்டைப் பார்த்து ஷானகா உட்பட ரசிகர்கள் பலரும் மிரண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |