Swiggy மூலம் ஆர்டர் செய்த சாலட்டில் நத்தை : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
பெங்களூருரில் Swiggy மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு உணவில் உயிருடன் நத்தை இருப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உணவில் உயிருடன் இருந்த நத்தை
பெங்களூருரில் உள்ள பிரபல உணவகத்தில் சாலட் ஆர்டர் செய்த ஒருவருக்கு உணவுடன் சேர்ந்து நத்தையும் வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ந்த அந்த நபர், தனது ட்விட்டர் தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Never ordering from @LeonGrill ever again!@SwiggyCares do whatever you can to ensure this shit doesn't happen to others...
— Dhaval singh (@Dhavalsingh7) December 15, 2023
Blr folks take note
Ughhhhh pic.twitter.com/iz9aCsJiW9
Leon Grill மீண்டும் ஒருபோதும் ஆர்டர் செய்ய வேண்டாம். மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு Swiggy - ஐ வலியுறுத்தியும், பெங்களூரு மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு Swiggy பதிலும் அளித்துள்ளது.
மேலும் இது போன்ற நிகழ்வு அந்த உணவகத்தில் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருப்பதாகவும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் தங்களது கருத்துகளை அவ்வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hi Dhaval. That is terrible. Please help us with the order ID, so we can look into it.
— Swiggy Cares (@SwiggyCares) December 15, 2023
^Sai
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |