அமெரிக்க வேலையை உதறிவிட்டு இந்திய கிராமம் ஒன்றில் ரூ 2000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்
அமெரிக்காவில் குடியேறி பெருந்தொகை சம்பளமாக பெற்றுவந்தவர், சொகுசு வாழ்க்கையை கைவிட்டு இந்தியாவின் கிராமம் ஒன்றில் ரூ 2000 கோடி நிறுவனத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார்.
பணிப்பெண் ஒருவரின் செயல்
மும்பை மாநகரின் தாராவி பகுதியை சேர்ந்த தமது பணிப்பெண் ஒருவரின் செயலே, Arjun Ahluwalia என்பவரை ரூ 2000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நிறுவத் தூண்டியுள்ளது.
தொடர்புடைய அந்தப் பெண்மணி தமக்கு ஒரு மொபைல் போன் வாங்குவதற்காக தனியார் நிதி சேவை நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கியுள்ளார். இதுவே, அர்ஜுன் அலுவாலியாவுக்கு புதிய நிறுவனம் ஒன்றை துவங்க உதவியது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர் மகாராஷ்டிரா மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆறு மாதங்கள் தங்கியிருந்து, அங்கு அவர் விவசாயிகள் சமூகத்தினரிடம் பழகியுள்ளார்.
அப்போது 27 வயதேயான அர்ஜுன் அலுவாலியா, இந்தியாவில் விவசாயிகள் முறைசாரா இடத்தில் இருந்தும் பணக் கடன் வழங்குபவர்களின் வலையிலும் விழாமல் நிதியுதவி பெற வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஜெய் கிசான் நிறுவனம்
இதன் அடிப்படையில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 8 மாதங்கள் செயல்படுத்தி வெற்றிகண்ட நிலையில் தமது ஜெய் கிசான் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
ஆனால் மிக விரைவிலேயே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், முதலீடும் குவிந்துள்ளது. இரண்டு கட்டமாக மொத்தம் 80 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு தொடக்கத்திலேயே முதலீடை ஈர்த்துள்ளது ஜெய் கிசான் நிறுவனம்.
தற்போது ஜெய் கிசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் ரூ 2,000 கோடி என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, மிகப்பெரிய நிறுவனங்கள் பல போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |