மும்பையில் கூலித் தொழிலாளர்களுடன் வாழ்ந்தவர்... இன்று அவரது நிறுவனத்தின் மதிப்பு ரூ 12,24,350 கோடி
மில்லியன் கணக்கான இந்திய மக்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற, நிதியுதவி அளிக்கும் திட்டத்தை தமது 66வது வயதில் அறிமுகம் செய்தவர் பரேக்.
பத்ம பூஷன் விருது
1911 மார்ச் மாதம் பிறந்தவர் ஹஸ்முக் பரேக். இவர் தான் மில்லியன் கணக்கான இந்திய மக்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற HDFC என்ற நிறுவனத்தை நிறுவியவர்.
ஒருகாலத்தில் மும்பையின் தினக்கூலிகள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்தவர். பிற்காலத்தில், இந்திய நிதித்துறையில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
பரேக் சூரத்தைச் சேர்ந்தவர் மட்டுமின்றி அவர் வங்கி குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பை கல்லூரி ஒன்றில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். தொடர்ந்து லண்டன் சென்று வங்கி மற்றும் நிதித்துறையில் பிஎஸ்சி பட்டம் பெற்றார்.
நாடு திரும்பியதும் மும்பையின் செயின்ட் சேவியர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். சில ஆண்டுகள் பங்குச்சந்தை தரகு நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.
தனது 66வது வயதில்
அதன் பின்னர் ICICI வங்கியில் வேலைக்கு சேர்ந்தார். நிர்வாக இயக்குநராக இருந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றார். தனது 66வது வயதில் பரேக் எடுத்த முடிவு இந்தியாவில் பல மில்லியன் மக்களின் சொந்த வீடு என்ற கனவு நிறைவேற வைத்தது.
1977ல் HDFC நிறுவனத்தை துவங்கியவர், 1978ல் முதல் கடன் HDFC-ல் இருந்து வழங்கப்பட்டது. 1984ல் கடன் அளிக்கும் தொகை 100 கோடியை தாண்டியது.
தற்போது HDFC மற்றும் HDFC வங்கி ஆகியவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ 12.24,350 கோடி என்றே கூறப்படுகிறது. 1994 நவம்பர் மாதம் பரேக் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |