கல்லீரல் சுத்தமாக இல்லேன்னா இவ்ளோ ஆபத்தா? வீட்டிலேயே கல்லீரலை எளிதாக சுத்தம் செய்ய இதை குடித்தால் போதும்
கல்லீரல்! நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் முதன்மையானது.
இது நமது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, உடற்சக்தியை உற்பத்தி செய்யும் செயல்பாட்டை செய்து வருகிறது.
கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால் இழைநார் வளர்ச்சி, கல்லீரல் உள்ளே கொழுப்பு, ஹெபடைடிஸ், கல்லீரல் திசுக்களில் கோளாறு, புற்றுநோய், வில்சனின் நோய், ஆல்ஃபா 1 - அன்டிட்ரிப்சின் போன்ற பிரச்சினைகள் மற்றும் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கல்லீரலை வீட்டில் இருந்த படி வெறும் 5 நாட்களில் சுத்தம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
ஒரு பீட்ரூட்
சிறிய அளவிலான கேரட் ஒன்று அல்லது இரண்டு
ஒரு பெரிய ஆப்பிள்
ஒரு டம்ளர் தண்ணீர்
தயாரிக்கும் முறை
முதலில் பீட்ரூட், கேரட், ஆப்பிள் மூன்றையும் நன்கு ஸ்மூத்தாக ஆகும் வரை ஜூசர் மிக்சரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இதை தண்ணீர் கலக்காமலேயே நீங்கள் செய்யலாம். பிறகு உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மேலும், இந்த ஜூஸை குடிப்பதற்கு முன்னர், ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் அரைவாசி எலுமிச்சை பழத்தை பிழிந்து கலந்து குடிக்க வேண்டும்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் இதை குடித்து வர உங்கள் கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உங்கள் கல்லீரல் நன்கு செயல்படும், இதோடு மொத்த உடலும் புத்துணர்ச்சி அடைவதை உணரலாம்.