இந்த சின்ன விஷயம் கூட உங்கள் கல்லீரலை காலி செஞ்சிடும்! உஷாரா இருந்துக்கோங்க
கல்லீரல் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பாகும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் மூல காரணமாக கல்லீரல் இருக்கிறது.
கல்லீரல் கோளாறு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
அப்படி பிரச்சனை வராமல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?
உடல் பருமன்
நீங்கள் பருமனாக இருந்தால் அல்லது அதிக எடையுடன் இருந்தால் கல்லீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்புகளும் அதிகம். குறிப்பாக கல்லீரல் நோய்களில் ஒன்றான ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தில் உள்ளவர்கள் கல்லீரல் கொழுப்பை குறைக்க எடை குறைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
சரிவிகித உணவுகள்
அதிக கலோரி உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் (வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி மற்றும் வழக்கமான பாஸ்தா) மற்றும் சர்க்கரைகளை தவிர்க்கவும். பச்சையாக அல்லது முழுவதும் சமைக்காத மட்டி மீன்களை சாப்பிட வேண்டாம். நார்ச்சத்து உணவுகள் அவசியம் சேருங்கள். புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானிய ரொட்டிகள், அரிசி மற்றும் தானியங்களிலிருந்து இதை பெறலாம்.
சிவப்பு இறைச்சி, குறைந்த கொழுப்புள்ள பால், சீஸ், கொழுப்புகள் ( தாவர எண்ணெய்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் மீன் போன்ற மோனோசாச்சுரேட்ட்ட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அவசியம். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியம்.
உடற்பயிற்சி
தொடர்ந்து உடறயிற்சி செய்வதன் முலம் உடலில் எரிபொருளுக்கான ட்ரைகிளிசரைடுகளை எரிக்க உதவுகிறது. மேலும் இது கல்லீரல் கொழுப்பையும் குறைக்கிறது.
மது
மது பானங்கள் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். இது கல்லீரல் செல்களை சேதப்படுத்தலாம் அல்லது அழிக்கலாம். இது கல்லீரலை காயப்படுத்தலாம். அதனால் உங்களுக்கான அளவு என்ன என்பது குறித்து மருத்துவரிடம் கேளுங்கள். மிதமான அளவு மட்டுமே மது குடிப்பதே நல்லது. அல்லது மதுவை முற்றிலும் நிறுத்துவதே நல்லது.
புகைப்பழக்கம்
புகைப்பழக்கம் கூட மோசமான ஆரோக்கியத்தை உண்டாக்குபவை தான். புகைப்பிடித்தல் கல்லீரல் நோயுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் சில மருந்துகள் கல்லீரலில் நச்சு விளைவுகளை உண்டாக்கலாம். அதனால் புகைப்பழக்கத்தை தவிர்ப்பதே நல்லது.