இந்த அறிகுறிகள் இருந்தால் கடந்து போக வேண்டாம்! கல்லீரல் பலவீனமாக உள்ளதாக அர்த்தம்
கல்லீரல் என்பது மனித உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பாகும்.
உடலின் ஆரோக்கியத்தில் கல்லீரலுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் வளர்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு கல்லீரல் முக்கிய ஒரு வேலையை செய்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் கல்லீரல் பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது.
கல்லீரல் பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்?
கல்லீரல் குறைபாடு வெளிப்படுத்தும் மிக முக்கியமான அறிகுறிகளில் மஞ்சள் காமாலையும் ஒன்று. மஞ்சள் காமாலை உள்ள ஒருவருக்கு சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் அவரின் கண்கள் மஞ்சளாகவும் மாறும். மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கல்லீரலில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதே ஆகும். இதனை சில சிறப்பு ரத்தப் பரிசோதனையின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
GETTY
கல்லீரல் குறைபாடு உள்ள ஒருவருக்கு அடிக்கடி பாதங்களில் வீக்கம் ஏற்படும்.
சிவந்த எரிச்சல் ஊட்டும் மற்றும் அரிப்பு தன்மையுடைய உள்ளங்கைகள் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையோருக்கு ஏற்படுகிறது. கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பினால் ரத்தத்தில் ஹார்மோன்களின் அளவு மாறுபடுவதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது.
பல் துலக்கும்போது பற்களின் ஈறுகளில் ரத்தம் வடிவதை நாம் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகவும் பல், ஈறுகளில் ரத்தம் வடிதல் பிரச்சினை உண்டாகும். கல்லீரலில் ஏற்படும் சில பிரச்சினைகளின் காரணமாக பல் ஈறுகளில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைதல் ஏற்படலாம்.
உடல் முழுக்க சருமத்தில் அரிப்பும் உண்டாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் அது கல்லீரல் சேதத்தின் அடையாளம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கல்லீரலில் புண்கள், வீக்கம் மற்றும் கல்லீரல் அழற்சி ஆகிய பிரச்சினைகள் இருக்கும்போது அவற்றில் இருந்து உற்பத்தியாகும் அமிலங்கள் குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்கும். அப்படி வாந்தி வரும்போது அவற்றுடன் ரத்தம் கலந்து வரும்.
healthline