ஆளுக்கு 2 கோல்கள் அடித்து..எதிரணியை சம்பவம் செய்த லிவர்பூல் வீரர்கள்
பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் போர்னேமௌத் அணியை வீழ்த்தியது.
முதல் பாதி
புள்ளிப்பட்டியில் 12வது இடத்தில் உள்ள போர்னேமௌத் (Bournemouth) அணி, முதலிடத்தில் உள்ள லிவர்பூல் (Liverpool) அணியை எதிர்கொண்டது.
Vitality மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல் பாதி கோல்கள் இன்றி 0-0 என முடிந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணியின் வீரர்கள் மிரட்டினர்.
@LFC (X)
Argentina அணியுடன் கேரளா வரும் Lionel Messi., 2 போட்டிகளில் பங்கேற்பு.. விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்
கோல்கள்
49வது நிமிடத்தில் அந்த அணியின் Darwin Nunez விரைவாக செயல்பட்டு கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, Diogo Jota 70வது நிமிடத்தில் அபார கோல் அடித்தார்.
@LFC (X)
பின்னர் அவரே 79வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை வலைக்குள் தள்ளினார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் (90+3) Darwin மீண்டும் ஒரு கோல் அடிக்க, லிவர்பூல் 4-0 என்ற கோல் கணக்கில் மிரட்டலான வெற்றி பெற்றது.
@LFC (X)
@LFC (X)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |