199வது கோல் அடித்த வீரர்! அதிரடி ஆட்டத்தில் தவிடுபொடியான எதிரணி
யூரோப்பா லீக் தொடரில் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
லூயிஸ் கோல்
இங்கிலாந்தின் Anfied மைதானத்தில் நடந்த போட்டியில் லிவர்பூல்(Liverpool) மற்றும் லஸ்க் (Lask) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் லிவர்பூல் அணி வீரர் லூயிஸ் டயஸ் (Luis Diaz) தலையால் முட்டி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து முகமது சாலா பாஸ் செய்த பந்தை கோடி காக்போ (Cody Gakpo) நேர்த்தியாக கோலாக மாற்றினார். இதன்மூலம் லிவர்பூல் அணி முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் காக்போ பந்தை விரட்டி சென்றபோது கோல் கீப்பர் பந்தை கைப்பற்றும் முயற்சியில் அவர் மீது மோதினார்.
PA/Peter Byrne
பெனால்டியில் கிடைத்த கோல்
இதன் காரணமாக காக்போ தவறி விழுந்ததால் லிவர்பூல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் முகமது சாலா மிரட்டலாக பேனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
PA Images/Alamy Images
இது லிவர்பூல் அணிக்காக அவர் அடித்த 199வது கோல் ஆகும். 90+2வது நிமிடத்தில் காக்போ மீண்டும் ஒரு கோல் அடிக்க, லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் அணி 12 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.
Getty
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |