Club Friendlies: சன்தர்லேண்டை சம்பவம் செய்த லிவர்பூல்
Club Friendlies கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் சன்தர்லேண்டை வீழ்த்தியது.
கீரன் மொரிஸன்
லிவர்பூல் மற்றும் சன்தர்லேண்ட் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி GEODIS Park-யில் நடந்தது.

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் கீரன் மொரிஸன் கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக 28வது நிமிடத்தில் சன்தர்லேண்ட் வீரர் என்ஸோ லே ஃபீ கோல் அடித்தார்.
இதன்மூலம் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அபார வெற்றி
49வது நிமிடத்தில் சன்தர்லேண்ட் வீரர் திமுர் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து லிவர்பூல் அணியின் டொமினிக் (56), சீசா (72) மற்றும் லீவிஸ் கௌமஸ் (85) ஆகிய மூவரும் கோல்கள் அடித்தனர்.
இதன்மூலம் லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |