லிவர்பூல் குண்டுவெடிப்பு தொடர்பில் பொலிஸ் முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியாவில் லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத சம்பவம் என்று பொலிசார் அறிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில், காரில் பயணித்த பயணி உயிரிழந்தார், காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே வெடித்து சிதறியே டாக்சியில் பயணித்த பயணியே வெடிகுண்டு சாதனத்தை எடுத்துச் சென்றதாக பொலிசார் கருதுகின்றனர்.
குண்டுவெடிப்பு தொடர்பில் இரண்டு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் ஒன்றில் ‘முக்கியமான பொருட்கள்’ கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கார் குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய டாக்ஸி டிரைவரின் பெயர் டேவிட் பெர்ரி என தெரியவந்துள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது வீட்டில் குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, Sutcliffe தெருவில் உள்ள பல மாடி வீடுகளில் சோதனை மேற்கொண்ட ஆயுதம் ஏந்திய பொலிசார், அங்கு 3 பேரை கைது செய்துள்ளனர்.
29, 26 மற்றும் 21 வயதுடைய 3 ஆண்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் 20 வயதுடைய மற்றொரு நபருடன் பின்னர் விசாரிக்கப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
? WATCH: Shocking moment David Perry’s taxi explodes, but he escapes
— The Spectator (@spectator) November 15, 2021
More here ? https://t.co/PEsyfKDH6p pic.twitter.com/3UnebFgz1Y