பெருந்தொகைக்கு சவுதி அரேபிய அணியில் இணையும் பிரபல லிவர்பூல் நட்சத்திரம்
சர்வதேச அளவில் பிரபலமான எகிப்தின் கால்பந்து முகமும், லிவர்பூல் நட்சத்திரமுமான முகமது சாலா சவுதி அரேபிய அணி ஒன்றில் இணைய இருப்பது உறுதியாகியுள்ளது.
அல் இத்திஹாத் கால்பந்து அணி
சவுதி அரேபியாவின் அல் இத்திஹாத் கால்பந்து அணியில் சாலா ஒப்பந்தம் இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை மாலை தனியார் விமானம் மூலம் சாலா ஜெத்தாவில் தரையிறங்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
லிவர்பூல் நட்சத்திரமான முகமது சாலாவின் சேவையை பெற அல் இத்திஹாத் நிர்வாகம் 150 மில்லியன் பவுண்டுகள் தொகையை செலவிட முன்வந்துள்ளது. வெள்ளிக்கிழமை நேரிடையாக இத்திஹாத் கால்பந்து அணி நிர்வாகத்துடன் சாலா ஒப்பந்தம் மேற்கொள்வார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |