இணையத்தை நொறுக்கிய ஜாம்பவானின் செல்ஃபி! பிரீமியர் லீக் பட்டம் வென்ற Liverpool..பரிசுத்தொகை எவ்வளவு?
பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில், லிவர்பூல் அணி 5-1 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
லிவர்பூல் வெற்றி
Anfield மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் லிவர்பூல் (Liverpool) மற்றும் டோட்டன்ஹாம் (Tottenham) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தின் டோட்டன்ஹாம் வீரர் டொமினிக் சோலன்கி கோல் அடித்தார். அதன் பின்னர் லிவர்பூல் அணி கோல்மழை பொழியத் தொடங்கியது.

லூயிஸ் டயஸ் 16வது நிமிடத்திலும், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் 24வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இரண்டாம் பாதியில் ஜாம்பவான் வீரர் முகமது சாலா கோல் அடிக்க (63வது நிமிடம்), 69வது நிமிடத்தில் எதிரணி வீரர் டெஸ்டினி உடோகி மூலம் லிவர்பூல் அணிக்கு (OwnGoal) 5வது கோல் கிடைத்தது.

இதன்மூலம் லிவர்பூல் 5-1 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது.
முகமது சாலா
கோல் அடித்த பின்னர் லிவர்பூல் வீரர் முகமது சாலா (Mohamed Salah) Kop Standயை நோக்கி ஓடி, ரசிகர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டது உடனடியாக இணையத்தில் வைரலானது.

மேலும், பிரீமியர் லீக் தொடரில் அதிக கோல்கள் அடித்த (ஆங்கிலேயர் அல்லாத) Sergio Aguero-யின் (184) சாதனையை முகமது சாலா (185) தகர்த்தார். அத்துடன் கோல்டன் பூட் பந்தயத்தில் சாலா தனது முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதற்கிடையில், லிவர்பூல் அணி 2019-20க்குப் பிறகு இரண்டாவது முறையாக வென்ற சாம்பியன் பட்டம் இதுவாகும். அந்த அணிக்கு பரிசுத்தொகையை 175.9 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கும்.

WE'RE PREMIER LEAGUE CHAMPIONS! 🏆 pic.twitter.com/2IbnXCX4mF
— Liverpool FC (@LFC) April 27, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |