உலககோப்பையால் தொடர்ந்து பறிபோகும் உயிர்.., தமிழகத்தில் நடந்த சோகம்
தமிழக மாவட்டம், கோவையில் உலகக்கோப்பை கிரிக்கெட் பார்த்துவிட்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைந்த மகளை தந்தை திட்டியதால் மாணவி விபரீத முடிவு எடுத்துள்ளார்.
மகளை திட்டிய தந்தை
தமிழக மாவட்டம், கோவை அருகே உள்ள மதுக்கரை பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவர், கண்ணம் பாளைம் பேரூராட்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, 19 வயதில் சுருதிகா என்ற மகள் இருந்தார்.
இவர், கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி தேர்வுக்கு படிக்காமல் டிவியில் உலகக்கோப்பை தொடரை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, கல்லூரியில் நடந்த தேர்வில் சுருதிகா குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். அப்போது, உலகக்கோப்பை பார்த்துவிட்டு மதிப்பெண்கள் குறைவாக எடுத்துள்ளாய் என சுருதிகாவை தந்தை மகேஷ் குமார் திட்டியதாக கூறப்படுகிறது.
மாணவி எடுத்த முடிவு
இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் எனக் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |