11 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து கனடாவில் வாழ்ந்துவந்த வெளிநாட்டவர்... மனைவியும் மகளும் கனடாவில் கால்வைத்த அந்த நெகிழ்ச்சித் தருணம்
கனடாவுக்கு 11ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த ஒருவர், தான் தனது குடும்பத்தை கனடாவுக்கு கொண்டு வருவதற்கு ஸ்பான்சர் செய்யமுடியாது என்பதை அறியாததால், 11 ஆண்டுகளாக குடும்பத்தினரைப் பிரிந்து வாழும் நிலைமைக்குள்ளாகினார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த Bahray Zaheriயை கால்கரியிலிருக்கும் அவரது அத்தை கனடா வருவதற்கு ஸ்பான்சர் செய்தபோது, புலம்பெயர்தல் விண்ணப்பத்தில் தன் மனைவி மற்றும் மகளுடைய பெயர்களை அவர் அந்த விண்ணப்பத்தில் சேர்க்கவில்லை.
பிறகு, தான் அவர்களுக்கு ஸ்பான்சர் செய்யும்போதுதான், அவர்களை தன்னால் ஸ்பான்சர் செய்து கனடாவுக்கு அழைத்துவரமுடியாது என்ற திடுக்கிடவைக்கும் உண்மை அவருக்குப் புரியவந்தது.
ஆரம்பத்தில் சில முறை அவர் ஆப்கானிஸ்தனுக்குச் சென்று மனைவியையும் மகளையும் சந்தித்துவந்தார். ஆனால், அவர் கடைசியாக அவர்களை சந்தித்தது 2014இல்...
11 ஆண்டுகளில் குடும்பத்தை கனடாவுக்கு அழைத்துவர Bahrayயும் அவரது சட்டத்தரணியான Peter Wongம் எடுத்த எந்த முயற்சியும் பலன் தரவில்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியபிறகு, ஆகத்து மாதம் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த Peter, தாலிபான்கள் பெண்களுக்கென எந்த உரிமைகளும் இல்லையென கருதுவதாகவும், 12, 13 வயதுள்ள சிறுமிகளைக் கூட வன்புனர்வுக்கும் கட்டாயத் திருமணத்துக்கும் உட்படுத்தும் அபாயம் உள்ளது எனவும், அதைக் குறித்துத்தான் தாங்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது Bahrayயின் மகள் Aeshaவுக்கு கிட்டத்தட்ட 12 வயது!
இந்நிலையில், வியாழக்கிழமையன்று Bahrayயின் மனைவியும் மகளும் கனடாவில் கால்வைத்துள்ளார்கள்.
Bahray, மகளைக் கட்டியணைத்துக்கொள்ள, அந்த சிறுமி தகப்பனைக் கட்டிக்கொண்டு கதறும் நெகிழ்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த தருணத்துக்காகத்தான் 11 ஆண்டுகள் காத்திருந்தேன், கனடா அரசுக்கு நன்று என நெகிழ்கிறார் Bahray...
குடும்பத்துடன் கனடாவில் புது வாழ்வைத் துவக்கும் முயற்சிகளைத் துவங்க இருக்கிறார் Bahray!