ஹரி மேகன் தம்பதி குறித்து வாழும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ள முக்கிய விடயம்
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மரணம் முதலான விடயங்களை துல்லியமாக கணித்தவர் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டவரான ஏதோஸ் சாலோமே.
தற்போது, ஹரி மேகன் தம்பதியர் தொடர்பில் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார் அவர்.
ஹரி மேகன் தம்பதி பிரியக்கூடும்...
2025ஆம் ஆண்டின் இன்விக்டஸ் போட்டிகளில் இளவரசர் ஹரி, தனது மனைவியாகிய மேகன் இல்லாமல் தனியாக கலந்துகொண்டார்.
இருவருமே தனித்தனியாக வருவாய் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஆக, தங்கள் வாழ்வின் சிக்கலான தருணத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஹரி மேகன் தம்பதியர், அமைதியாக பிரியும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கிறார் ஏதோஸ்.
அதாவது, அவர்கள் முறைப்படி விவாகரத்து செய்துகொள்ளப்போவதுபோல் தெரியவில்லை என்று கூறும் அவர், அவர்கள் இருவரும் திருமணத்தில் இணைந்தே இருப்பார்கள் என்றும், ஆனால், உணர்வு ரீதியாக அவர்கள் அதிக அளவில் விலகியே இருப்பார்கள் என்றும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வும் தொழிலும் தனித்தனியே இருக்கும் என்றும் தான் நம்புவதாகவும் தெரிவிக்கிறார்.
இன்னொரு முக்கிய விடயம், 2026ஆம் ஆண்டில் இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்குத் திரும்பக்கூடும் என்கிறார் ஏதோஸ்.
என்றாலும், அது அதிகாரப்பூர்வமாக ராஜ குடும்பத்துக்குத் திரும்பும் நிகழ்வாக இருக்காது என்று கூறும் அவர், அது தூதரக ரீதியிலான ஒரு நிகழ்வாக இருக்கும் என்றும், இருதரப்புக்கும் இடையில் பாலங்களை உருவாக்கும், பதற்றங்களைக் குறைக்கும் நிகழ்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில், ஹரியின் ஆலோசகர்களும், பக்கிங்காம் அரண்மனை சார்பில் பிரதிநிதிகளும் ரகசியமாக சந்தித்துப் பேசிகொண்டது நினைவிருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |