ருத்ரதாண்டவமாடிய லிவிங்ஸ்டன்! 82 பந்துகளில் 166 ஓட்டங்கள் எடுத்து லண்டன் ஸ்பிரிட் வெற்றி
London Spirit beat Birmingham Phoenix: The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பர்மிங்காம் ஃபீனிக்ஸை வீழ்த்தியது.
லார்ட்'சில் நடந்த The Hundred போட்டியில், லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணியை வீழ்த்தியது.
கிளார்க், டிக்சன் விளாசல்
பர்மிங்காம் ஃபீனிக்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் குவித்தது.
ஜோ கிளார்க் (Joe Clarke) 42 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், சீன் டிக்சன் (Sean Dickson) 28 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணியில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 16 ஓட்டங்களும், பேர்ஸ்டோவ் 10 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
லிவிங்ஸ்டன், பிரேவிஸ் ருத்ரதாண்டவம்
அடுத்து கைகோர்த்த அணித்தலைவர் லியாம் லிவிங்ஸ்டன், டெவால்ட் பிரேவிஸ் கூட்டணி சிக்ஸர்களை பறக்கவிட்டது.
அரைசதம் விளாசிய லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone) 30 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
எனினும் டெவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 55 ஓட்டங்கள் ( 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாச, லண்டன் ஸ்பிரிட் அணி 82 பந்துகளில் 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |