உங்க அப்பா உயிரோடு இருக்கிறாரா? தவெக ரசிகரின் கேள்விக்கு லிவிங்ஸ்டன் மகள் பதிலடி
சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் லிவிங்ஸ்டன் மகள்.
லிவிங்ஸ்டன் மகள் பதிலடி
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை விவகாரத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடாவிடம் தமிழக வெற்றி கழகத்தின் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது தந்தை லிவிங்ஸ்டன் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதற்கு "உங்க அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார் தவெக ரசிகர் ஒருவர்.
இதற்கு, "ஹாய் TVK. நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அல்லவா நினைத்தேன்" என்று காட்டமாக பதில் அளித்துள்ளார் ஜோவிடா.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |