திருமணத்துக்கு முன் வயதில் மூத்த பெண்ணுடன் அந்தரங்க உறவு! இளவரசர் ஹரி அதிர்ச்சி தகவல்
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர் ராஜ குடும்பத்ஹில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து காத்திருக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்
இந்நிலையில், இளவரசர் ஹரி அடுத்து வெளியிட இருக்கும் புத்தகமான Spare என்ற புத்தகத்தில் தன்னைக்குறித்த பல விடயங்களை ஒளிவுமறைவின்றி வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
திருமணத்துக்கு முன் ஹரியுடன் அந்தரங்க உறவு வைத்துக்கொண்ட பெண்
இளவரசர் ஹரி இராணுவத்தில் பணியாற்றியபோது தனது நண்பர்களிடம் சில இரகசியங்களைப் பகிர்ந்துகொண்டாராம். அவற்றில், தான் தன்னைவிட வயதில் மூத்த அழகான ஒரு பெண்ணுடன் வாழ்வில் முதல் முறையாக பாலுறவுகொண்டதாக தெரிவித்துள்ளார் ஹரி.
இந்த விடயமும் ஹரியின் Spare என்னும் சுயசரிதைப் புத்தகத்தில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
Credit: Rex
இந்நிலையில், 57 வயதாகும் நிலையிலும் அவ்வப்போது ஊடகங்களில் அரைகுறை உடையில் போஸ் கொடுக்கும் Liz Hurley என்ற நடிகையிடம், இளவரசர் ஹரி நெருங்கிப் பழகிய பெண் நீங்கள்தானா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நிச்சயமாக நான் அந்தப் பெண் இல்லை, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார் Liz Hurley.
தன்னைவிட மூத்த பெண் ஒருவரிடம் தன்னை இழந்ததாக இளவரசர் கூறியபோது, அவர் வெறும் பதின்ம வயதுகளில் இருந்தார் என்பது குறிப்பிடத்தகது.
Credit: Mike Webster/Rex Features