புதிய அமைச்சரவையை அமைக்கும்படி லிஸ் ட்ரஸ்ஸைக் கேட்டுக்கொண்ட பிரித்தானிய மகாராணியார்: வெளியான புகைப்படங்கள்
கன்சர்வேட்டிவ் கட்சியினரால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் நேற்று மதியம் பிரித்தானிய மகாராணியாரைச் சென்று சந்தித்தார்.
புதிய அமைச்சரவையை அமைக்கும்படி லிஸ் ட்ரஸ்ஸைக் மகாராணியார் கேட்டுக்கொண்டார்.
பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்கும்போது, புதிதாக பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்டவர் முதலில் பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார்.
பிரதமரின் கைகளில் மகாராணியாரும், மகாராணியாரின் கைகளில் பிரதமரும் முத்தமிடுவார்கள். இது பிரித்தானிய மரபு.
மகாராணியார் புதிய அமைச்சரவையை அமைக்கும்படி பிரதமரைக் கேட்டுக்கொள்வார். பிரதமரும் அதை ஏற்றுக்கொள்வார்.
அதன் பின்னரே, பிரதமர் இல்லம் முன்பு தன் முதல் உரையை ஆற்றுவார், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
Credit: PA
தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியினரால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ்ஸும் நேற்று மதியம் பிரித்தானிய மகாராணியாரைச் சென்று சந்தித்துள்ளார். பால்மோரல் மாளிகையில் தங்கியிருக்கும் மகாராணியார் லிஸ் ட்ரஸ்ஸை வரவேற்று, புதிய அமைச்சரவையை அமைக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரான லிஸ் ட்ரஸ், மகாராணியாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அவரது கைகளில் முத்தமிட்டார். ஆக, தற்போது லிஸ் ட்ரஸ் அதிகாரப்பூர்வமாக பிரித்தானியாவின் பிரதமராக மகாராணியாரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Credit: PA
மகாராணியாரை லிஸ் ட்ரஸ் சந்திக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், தனது ஆட்சிக்காலத்தில் பிரதமராக நியமிக்கும் 15ஆவது நபர் லிஸ் ட்ரஸ், அதாவது, தன் ஆட்சிக்காலத்தில் மகாராணியார் 15 பிரதமர்களைப் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.