ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி: முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு
PDCA எனப்படும் சிறப்பு நிதியுதவியான 115,000 பவுண்டுகள் தொகைக்கு அவர் தகுதியுடையவர்
லிஸ் ட்ரஸ் குறித்த தொகைக்கு தகுதியானவர் அல்ல, அதை நிராகரிக்க வேண்டும் என சர் கீர் ஸ்டார்மர்
பிரித்தானிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவி விலகிய நிலையில், முன்னாள் பிரதமர்களுக்கான சிறப்பு நிதியுதவி 1 கோடி தொகையை அவர் கோரக்கூடாது என எதிர்ப்பு வலுத்துள்ளது.
பிரித்தானிய பிரதமராக 45 நாட்கள் பதவியில் இருந்த லிஸ் ட்ரஸ் கடந்த வியாழக்கிழமை தாம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து PDCA எனப்படும் பொதுமக்களுக்கு சேவையாற்றியவர்களுக்கான சிறப்பு நிதியுதவியான 115,000 பவுண்டுகள் தொகைக்கு அவர் தகுதியுடையவர் ஆகிறார்.
@bbc
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்கள் ஆண்டுக்கு 115,000 பவுண்டுகள் தொகையை அரசிடம் இருந்து கோரலாம். ஆனால், லிஸ் ட்ரஸ் அதற்கான தகுதியை பெறவில்லை என தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக லிஸ் ட்ரஸ் குறித்த தொகைக்கு தகுதியானவர் அல்ல எனவும், அவர் பொறுப்புணர்ந்து அதை நிராகரிக்க வேண்டும் எனவும் சர் கீர் ஸ்டார்மர் கோரிக்கை வைத்துள்ளார்.
லிபரல் டெமாக்ராட் தலைவர் எட் டேவியும் தற்போது இதே கருத்தை முன்வைத்துள்ளார், பொதுமக்கள் வரிப்பணத்தில் ஆண்டு தோறும் 115,000 பவுண்டுகள் கைப்பற்றும் தகுதியை லிஸ் ட்ரஸ் பெறவில்லை என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.
@AP
PDCA என்பது முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ஜான் மேஜரால் 1991ல் அறிவிக்கப்பட்டது. அரசியலில் தொடரும் முன்னாள் பிரதமர்கள் ஆண்டு தோறும் குறித்த தொகையை அரசிடம் கோரலாம்.
குறித்த தொகையில், அலுவலக ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும், அலுவலக கட்டிடத்திற்கு பராமரிப்பு செலவுகள் மற்றும் வாடகை என செலவிடவும், முன்னாள் பிரதமர்கள் என்ற முறையில் முன்னெடுக்கும் பயணங்கள் என பயன்படுத்தலாம்.
தற்போதும் செயல்பட்டுவரும் முன்னாள் பிரதமர்கள் பலர் குறித்த தொகையை ஆண்டு தோறும் கைப்பற்றி வருகின்றனர். 2020 மற்றும் 2021ல் ஜான் மேஜர் மற்றும் டோனி பிளேயர் ஆகியோர் முழு தொகையையும் கைப்பற்றினர்.
ஆனால் அதே ஆண்டில் முன்னாள் பிரதமர் தெரசா மே 57,000 பவுண்டுகள் மட்டும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.