பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்., அறிவிப்பு எப்போது?
பிரதமர் லிஸ் ட்ரஸ் வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தனது கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்த பதவியில் நீடிப்பதாக ட்ரஸ் கூறினார்.
லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, இன்னும் ஒரு வாரத்திற்குள் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் என்று முடிவெடுத்துள்ளதாக என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது ராஜினாமாவை அறிவித்தபோது பேசிய லிஸ் ட்ரஸ், "இன்று காலை நான் 1922 கமிட்டியின் தலைவரான சர் கிரஹாம் பிராடியைச் சந்தித்தேன், அடுத்த வாரத்திற்குள் தலைமைத் தேர்தல் நடத்தப்படும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்று கூறினார்.
மேலும் தனது கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்த பதவியில் நீடிப்பதாக ட்ரஸ் கூறினார்.
1922 கன்சர்வேட்டிவ் எம்.பி.க்களின் செல்வாக்குமிக்க குழுவின் தலைவரான கிரஹாம் பிராடி, மற்றும் தனது நெருங்கிய கூட்டாளிகளான துணைப் பிரதமர் Therese Coffey மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சேர்மேன் Jake Berry ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் பதவி விலகுவதாக லிஸ் ட்ரஸ் அறிவித்தார்.
இந்த சந்திப்பை அடுத்து, கன்சர்வேடிவ் 1922 கமிட்டியின் தலைவர் சர் கிரஹாம் பிராடி (Sir Graham Brady) வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பத்திரிகையாளர்களிடம், ஹாலோவீன் பட்ஜெட்டுக்கு அக்டோபர் 28-ஆம் திகத்துக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak), காமன்ஸ் தலைவர் பென்னி மோர்டான்ட் (Penny Mordaunt) மற்றும் தற்போதைய நிதி அமைச்சர் ஜெரமி ஹன்ட் (Jeremy Hunt) உள்ளிட்ட முன்னணி பிரதம வேட்பாளர்களுடன், கன்சர்வேடிவ்கள் இப்போது புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
2019 டிசம்பரில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்ற ஆணையின் பேரில் கன்சர்வேடிவ் கட்சியினர் இப்போது மூன்றாவது பிரதமரை நியமிக்க உள்ளனர்.