மாயமான காலணிகளுக்காக 12 ஆயிரம் பவுண்டுகள்! அரசின் உத்தரவை மறுத்த முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான லிஸ் ட்ர்ஸ், அவர் தங்கியிருந்த அரசு இல்லத்தில் காணாமல் போன பொருட்களுக்கான தொகை செலுத்த கோரிய நிலையில், அதற்கான விலைப்பட்டியலை கோரியுள்ளார்.
குறுகிய கால பிரதமர்
குறுகிய காலம் மட்டுமே பதவியில் நீடித்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ர்ஸ், தற்போது அரசு இல்லத்தில் காணாமல் போன பொருட்களுக்கான செலவினங்களை செலுத்தும் மசோதாவை எதிர்கொள்கிறார்.
Image: Reuters
அரசின் Chevening இல்லத்தில் லிஸ் அவரது உள் வட்டத்துடன் சந்திப்புகளை நடத்தினார். அது பெரும்பாலும் மாலையில் விருந்தாக மாறியது.
அச்சமயத்தில் துண்டு அங்கிகள் மற்றும் காலணிகள் போன்ற பொருட்கள் மாயமாகிவிட்டதாக, வீட்டில் இருந்த ஊழியர்கள் அமைச்சரவை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
Wikipedia
12 ஆயிரம் பவுண்டுகள்
இதனால் அதற்கான செலவு 12,000 பவுண்டுகளை லிஸ் ட்ரஸ் செலுத்திட வேண்டும் என மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், லிஸ் அதனை செலுத்த மறுத்துள்ளார்.
Image: Getty Images
மேலும், அதற்கு முன்பாக ஒரு துல்லியமான விலைப்பட்டியல் வேண்டும் என அவர் கோரியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் லிஸ் ட்ரஸின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, லிஸ் எப்போதும் Cheveningயில் தனது தனிப்பட்ட விருந்தினர்களின் செலவுகளுக்கு பணம் செலுத்தியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.