பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் கனடாவில் இந்த பள்ளியில் படித்தாராம்: உங்களுக்குத் தெரியுமா?
பிரித்தானியாவின் புதிய பிரதமராகியுள்ள லிஸ் ட்ரஸ் ஒரு வருடம் கனடாவில் படித்தாராம்.
அவருடன் படித்த ஒரு மாணவி அவரை நினைவுகூர்கிறார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் ஒரு வருடம் கனடாவில் படித்தாராம்.
லிஸ் ட்ரஸ்ஸின் தந்தையாகிய John Truss, ஒரு கணித ஆசிரியர். லிஸ்ஸுக்கு 12 வயதாகும்போது, அவரது தந்தை பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Simon Fraser பல்கலையில் ஒரு ஆண்டு பணியாற்றினாராம். அப்போது கனடாவில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துள்ளார் லிஸ்.
லிஸ் ட்ரஸ்ஸே இதை முன்னொரு முறை குறிப்பிட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு, கனடா தினத்தன்று, சமூக ஊடகம் ஒன்றில், 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண்டு நான் கனடாவில் செல்விட்டேன், அந்த காலகட்டம் வாழ்க்கையைக் குறித்த என் கண்ணோட்டத்தையே மாற்றிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார் லிஸ்.
Parkcrest Elementary
பர்னபியிலுள்ள Parkcrest Elementary School என்ற பள்ளியில் ஆசிரியையாக பணி புரியும் பிரெண்டாவுக்கு (Brenda Montagano), லிஸ் ட்ரஸ் என்ற பெண் பிரித்தானிய பிரதமராகியிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டதும் பொறி தட்டியிருக்கிறது. இந்த பெயரை நாம் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறோமே என யோசிக்க, அப்புறம்தான், அந்த லிஸ் ட்ரஸ் தன்னுடன் இதே பள்ளியில் படித்த தன் சக மாணவியாகிய லிஸ் ட்ரஸ் என்பது அவருக்கு நினைவுக்கு வந்திருக்கிறது.
லிஸ் ட்ரஸ் தன்னுடன் படிக்கும்போது பள்ளியில் எடுத்த புகைப்படத்தை பத்திரமாக வைத்திருக்கும் பிரெண்டா, நடு வரிசையில் இடமிருந்து வலமாக பிங்க் நிற ஸ்வெட்டர் போட்டிருக்கும் பெண் தான் லிஸ் என்கிறார்.
அப்போதே லிஸ் நன்றாக படிப்பாராம். அத்துடன், அவர் நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவராக இருந்தார் என்கிறார் பிரெண்டா.
oldvancouver/Instagram
தன்னுடன் படித்த லிஸ் இன்று பிரித்தானியாவின் பிரதமர் என்பதை நம்பவே முடியவில்லை என்கிறார் பிரெண்டா.
இங்கிலாந்துக்குச் சென்றால், இதே புகைப்படத்தைக் காட்டி, லிஸ், ஒரு காபி சாப்பிடலாமா? என்று கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் பிரெண்டா!