விமானத்தில் பெண்ணின் ஆடைக்குள் மறைந்து 4000கிமீ பயணம் செய்த பல்லி! ஒரு சுவாரசிய தகவல்
பல்லி ஒன்று பெண்ணின் பெட்டிக்குள் இருந்த உள்ளாடைக்குள் மறைந்திருந்தவாறே இங்கிலாந்து வரை பயணம் செய்துள்ள நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வருபவர் லிசா ரஸ்ஸல்(47). இவர் பார்படோஸ் எனும் தீவு நாட்டில் இருந்து தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு வந்துள்ளார். கிட்டத்தட்ட சுமார் 4000கிமீ தூரம் கடந்து வந்த லிசா வீட்டிற்கு வந்து தனது பெட்டியை திறந்து பார்த்தார்.
அப்போது பெட்டியில் அவர் வைத்திருந்த உள்ளாடைக்குள் சிறிய பல்லி ஒன்று இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த நிகழ்வு குறித்து அந்த பெண் கூறியதாவது, முதலில் நான் அந்த பல்லியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
ஆனால் சிறிய பல்லி மிகவும் அதிர்ஷ்டசாலி. இங்கிலாந்து வரை சுமார் நான்காயிரம் மைல் தூரம் என்னுடன் விமானத்தில் பயணம் செய்துள்ளது. இந்தப் பல்லி பார்படோஸ் பகுதியில் வளர்ந்தது என்பதால் அதனால் இங்கிலாந்தில் வாழ முடியாது.
எனவே நான் அந்த பல்லியை ஊர்வன காப்பாளர்களிடம் கொடுத்து விட்டதாகவும் அங்கு அந்த பல்லி நன்றாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.