ராஜஸ்தான் ராயல்ஸின் வெற்றியைத் தட்டிப்பறித்த ஆவேஷ்கான்! சொந்த மைதானத்திலேயே மரண அடி கொடுத்த லக்னோ அணி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
மேயர்ஸ் அரைசதம்
ஜெய்ப்பூரின் சவாய் மன்சிங் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. மேயர்ஸ் 51 ஓட்டங்களும், ராகுல் 39 ஓட்டங்களும் எடுத்தனர். அஷ்வின் 2 விக்கெட்டுகளும், சந்தீப் சர்மா, போல்ட் மற்றும் ஹோல்டர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
154 to defend ?
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2023
Need our bowlers to Halla Bol in the second innings. ?#RRvLSG | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/BlB2BJtdAS
முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் எடுத்தது. அப்போது ஜெய்ஸ்வால் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோஸ் பட்லர் 40 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி தடுமாறியது.
கேப்டன் சாம்சன் 2 ஓட்டங்களிலும், ஹெட்மையர் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய படிக்கல் வெற்றிக்காக போராடினார்.
This is a bowlers’ appreciation post. ? pic.twitter.com/6d0ezyqHZO
— Rajasthan Royals (@rajasthanroyals) April 19, 2023
ஆவேஷ் கான் மிரட்டல் பந்துவீச்சு
கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஆவேஷ் கான் பந்துவீசினார். ஓவரின் 3வது பந்தில் படிக்கல் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்திலேயே ஜுரேல் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு செக் வைத்தார் ஆவேஷ் கான். லக்னோ வெற்றி கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. லக்னோ அணியின் தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Halla Bol diye, Gazab Andaz mein ?#RRvLSG | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/mD2dLjx0Bx
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2023