5 லட்ச ரூபாய் கடனில் தொடங்கி ரூ.150 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர்.., யார் அவர்?
ரூ.5 லட்சம் கடனில் தொடங்கிய பேஷன் பிராண்ட் நிறுவனத்தை ரூ.150 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிய நபரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
யார் அவர்?
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் போஜ்ராஜ் நவானி. இவருக்கு சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பதில் ஆர்வம் இருந்ததால் தனது நண்பர்களுக்கான ஆடையையும் அவர் தான் தேர்ந்தெடுப்பாராம்.
மேலும், ஆடை வடிவமைப்பு மற்றும் படம் வரைதல் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டுள்ளார். இவர், தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மத்திய பிரதேசத்தில் 1995 -ம் ஆண்டு "சாரி மேடம்" என்ற பெயரில் ஆண்களுக்கான ஒரு பிரத்தியேக ஆடை கடையை நிறுவினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர், தனது தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கத்தில் 2003 -ம் ஆண்டில் மும்பைக்கு சென்று பேஷன் இண்டஸ்ட்ரியில் பலரிடம் பணியாற்றினார்.
பின்னர், ரூ.5 லட்சம் கடன் வாங்கி 2008 -ம் ஆண்டில் நோஸ்ட்ரம் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் (Nostrum Fashion Pvt Ltd ) என்ற பெயரில் ஆண்களுக்கான ஆடை நிறுவனத்தை தொடங்கினார். இதற்கான லோகா, ஆடை வடிவமைப்பு ஆகியவற்றையும் இவரே உருவாக்கினார்.
முன்னதாக, 2007 -ம் ஆண்டில் இவருடைய நிறுவனம் அறிமுகம் செய்த லைக்ரா ஜீன்ஸ் தான் இவருடைய வெற்றிக்கு காரணமாக இருந்தது.
தற்போது இவருடைய நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. ஆண்களுக்கான ஜீன்ஸ்கள், ஜாக்கெட்டுகள், டீ சர்ட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், மும்பையில் இவருக்கு சொந்தமாக இருக்கும் அலுவலகத்தில் 250 பேர் பணிபுரிகின்றனர். தற்போது, இவருடைய நிறுவனமானது ரூ.150 கோடியை வருமானமாக ஈட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |