உடனே ரூ.50,000 கடன் வேண்டுமா? எந்த ஒரு உத்திரவாதமும் இல்லாமல் பெற முடியும்
சிறிய அளவில் தொழிலை தொடங்க விரும்புபவர்களுக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் ரூ.50 ஆயிரம் கடன் பெற முடியும்.
பொதுவாகவே பலருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஆனால், அதற்கு நாம் கடன் பெறுவதற்கு ஏதாவது ஒரு பொருளை அடமானம் வைத்தால் மட்டுமே கிடைக்கும்.
சிஷு முத்ரா கடன் திட்டம்
இந்நிலையில், எஸ்பிஐ சிஷு முத்ரா கடன் திட்டம் மூலம் எவ்வித அடமானமோ, உத்தரவாதமோ வழங்கலாமல் கடன் வாங்க முடியும்.
இந்த திட்டமானது நாட்டில் உள்ள சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில்முனைவோர் தங்களது வணிகத்தை வளர்ப்பதற்காக செயல்படுத்தப்படுகிறது.
பிரதமர் முத்ரா திட்டத்தின் ஒரு பகுதியாக, எஸ்பிஐ வங்கியானது இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இதில் நாம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை கடன் வாங்கலாம்.
இந்த கடனை, 69 மாதங்களுக்குள் (5 ஆண்டுகள்) திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்கான வட்டி ஆண்டுக்கு 12% ஆகும்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் எந்தவொரு உத்தரவாதமும், அடமானமும் இல்லாமல் விண்ணப்பதாரர் கடன் பெறலாம்.
சொந்தமாக தொழில் தொடங்குபவர்களும், ஏற்கனவே நடத்தி வரும் தொழிலை வளர்ப்பதற்கும் இந்த திட்டத்தில் கடன் பெறலாம். இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இதில் கடன் பெறலாம்.
மேலும் நீங்கள் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கடன் வாங்க நினைத்தால் எஸ்பிஐ கிஷோர் முத்ரா கடனின் கீழ் பெறலாம்.
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்க நினைத்தால் எஸ்பிஐ தருண் முத்ரா கடனின் கீழ் வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு 18 முதல் 60 வயது இருக்க வேண்டும்.
ஜிஎஸ்டி வரி மற்றும் வருமான வரி கணக்குகள் பற்றிய பதிவுகளை வைத்திருக்க வேண்டும். ஆண், பெண் இருவருக்குமே கடன் கிடைக்கும்.
முக்கியமாக, எஸ்பிஐ சிஷு முத்ரா கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, வசிப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கிரெடிட் கார்டு அறிக்கை, வணிகச் சான்றிதழ், செல்போன் எண், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |