குறைவான வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கலாம்.., அரசின் இந்த திட்டம் தெரியுமா?
விஸ்வகர்மா திட்டத்தில் குறைந்த வட்டியில் எவ்வளவு கடன் கிடைக்கும் என்பதை பற்றியும், அதை பற்றிய விவரங்களையும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
விஸ்வகர்மா திட்டம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 17 திகதி விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய தொழில்களைச் செய்துவருபவர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கான விஸ்வகர்மா திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அதாவது, 18 பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ. 13,000 கோடி மதிப்பீட்டில் இந்த விஸ்வகர்மா திட்டம் உருவாக்கப்பட்டது.
எவ்வளவு கடன் வழங்கப்படுகிறது?
இந்த திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள் பொது சேவை மையங்கள் மூலம் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் அடையாள அட்டை மூலம் அங்கீகாரமும், பயிற்சி மற்றும் கருவித்தொகுப்புக்கான ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்.
பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், திறமையான நபர் தனது சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால் மற்றும் நிதி சிக்கல்களால் சிக்கல்களைச் சந்தித்தால், இந்தத் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதன் கீழ், முதற்கட்டமாக தொழில் தொடங்க ரூ.1 லட்சமும், அதன் விரிவாக்கத்திற்காக இரண்டாம் கட்டமாக ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தக் கடன் 5 சதவீத வட்டியில் மட்டுமே வழங்கப்படுகிறது.
தகுதியானவர்கள் யார்?
இந்த விஸ்வகர்மா திட்டத்தில் தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை பாய், துடைப்பம் தயாரிப்பவர், கயிறு திரிப்பவர்கள், பொம்மை செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர்,பொம்மை செய்பவர், பூ கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், சுத்தியல் போன்ற கருவிகள் தயாரிப்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் உள்ளிட்டோர் பதிவு செய்ய முடியும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நபர்களின் வயது 18 ஆக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், கடந்த 5 ஆண்டுகளில் சுய தொழிலுக்காக மத்திய அரசு அல்லது மாநில அரசின் கடன் சார்ந்த திட்டங்களின் கீழ் கடன் பெற்றிருக்க கூடாது. இதில், ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, பான் கார்டு, வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கிக் கடவுச்சீட்டு மற்றும் செல்லுபடியாகும் மொபைல் எண் ஆகியவை தேவைப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த திட்டத்தில் பலன் பெறுபவர்கள் www.pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
1. pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2. பிரதம மந்திரி விஸ்வகர்மா கௌஷல் சம்மன் யோஜனா முகப்பு பக்கத்தில் தெரியும்.
3. அங்கு ஒன்லைன் விருப்ப இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.
4. பதிவு எண் மற்றும் கடவுச்சொல் உங்கள் மொபைலுக்கு SMS மூலம் அனுப்பப்படும்.
5. இதற்குப் பிறகு, பதிவுப் படிவத்தை கவனமாகப் படித்து முழுமையாக நிரப்பவும்.
6. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
7. இப்போது படிவத்தில் உள்ளிடப்பட்ட தகவலை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |