நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் விஜய்.. வீடியோ
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவானது சற்று முன்னர் தொடங்கியது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரையில் நடைபெறும். இந்த தேர்தலில் சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கின்றனர்.
இதற்காக 31000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் இல்லாத அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8 முனைக்கும் அதிகமான போட்டி நிலவுகிறது.
— DON Updates (@DonUpdates_in) February 19, 2022
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நீதி மய்யம், பாஜக, அமமுக போன்ற கட்சிகள் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை செலுத்த சிவப்பு நிற காரில் வந்தார்.
பின்னர் அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்கை செலுத்தினார், நடிகர் விஜய்யின் “விஜய் மக்கள் இயக்கம்” சார்பில் பலர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை சின்னங்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.