வாக்களிக்க முடியாமல் திரும்பிய போரிஸ் ஜோன்சன்: உள்ளாட்சி தேர்தலில் தொழிற்கட்சி ஆதிக்கம்
பிரித்தானிய உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் தொழிற்கட்சி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பொதுத் தேர்தலில் வெற்றி உறுதி என கொண்டாடி வருகின்றனர்.
தொழிற்கட்சி ஆதிக்கம்
பிரித்தானியாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் தொழிற்கட்சி ஆதிக்கம் செலுத்தி வருவதாகவே கூறப்படுகிறது.
Thurrock கவுன்சிலை தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது. அறிவிக்கப்பட்ட முதல் 13 வார்டுகளில் 10ல் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது, மொத்தம் 49 ஆசனங்களைக் கொண்ட கவுன்சிலில் அவர்களுக்கு 25 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இன்னும் 4 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளிவர உள்ளன. இதனிடையே வெளியான கருத்துக்கணிப்புகளில் கன்சர்வேடிவ் கட்சி 500 கவுன்சில் ஆசனங்களை இழக்கலாம் என்றே கூறப்படுகிறது.
Fareham கவுன்சிலை கன்சர்வேடிவ் கட்சி தக்கவைத்துள்ளது. இதுவரை முடிவுகள் வெளியான 22 ஆசனங்களில் 17 எண்ணிக்கையில் கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றியுள்ளது.
North East Lincolnshire கவுன்சிலை கன்சர்வேடிவ் கட்சி இழந்துள்ளது. தொழிற்கட்சி 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 4 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளிவர உள்ளது.
வாக்களிக்க முடியாமல்
இதனிடையே, பிரதமர் ரிஷி சுனக் எங்கே எப்போது வாக்களித்தார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை என்றும், அவர் நேரிடையாக சென்றாரா அல்லது அஞ்சல் முறையில் வாக்களித்தாரா என்ற தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் தேர்தலில் அடையாள அட்டை கட்டாயம் என விதிகளை திருத்திய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் மேயர் தேர்தலில் 47 சதவிகித ஆதரவுடன் சாதிக் கான் மூன்றாவது முறையும் வெற்றிவாகை சூடுவார் என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |