இன்று இங்கிலாந்தில் உள்ளாட்சித் தேர்தல்: சில தகவல்கள்
இன்று இங்கிலாந்து முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
அது தொடர்பில சில தகவல்களை இங்கு காணலாம்.
இங்கிலாந்தில், 1,641 கவுன்சில் இருக்கைகளுக்கான தேர்தல்,இன்று, அதாவது, மே மாதம் 1ஆம் திகதி நடைபெறுகின்றது.
இங்கிலாந்தின் 317 கவுன்சில்களில் 24 கவுன்சில்களுக்கு தேர்தல் நடைபெறுவதுடன், ஆறு மேயர்களுக்கான தேர்வும் நடைபெற உள்ளது.
இது, 2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறும் முதல் உள்ளூர் தேர்தல் ஆகும்.
இந்த தேர்தலைப் பொருத்தவரை ஒருவர் அதிகம் கவனம் ஈர்த்துவருகிறார். அவர், Reform UK கட்சியின் தலைவரான நைஜல் (Nigel Farage).
இந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி நூற்றுக்கணக்கான இருக்கைகளை இழக்கும் என எதிர்பார்க்கப்படும் அதே நேரத்தில், நைஜல் கட்சி பெரும் லாபமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால், அது ஆளும் லேபர் கட்சிக்கே கவலையை உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது.
ஏனென்றால், உங்கள் கவுன்சிகளை நடத்த நைஜல் கட்சி முட்டாள்களை நம்பவேண்டாம், அவர்களுக்கு தங்கள் வேலையையே ஒழுங்காகச் செய்யத் தெரியாது என லேபர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் விமர்சித்துள்ளார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |