பிரித்தானியா உள்ளாட்சித் தேர்தல்... தொழிற்கட்சி தொடர்ந்து ஆதிக்கம்: 1,026 ஆசனங்களுடன் முன்னிலை
பிரித்தானியா உள்ளாட்சித் தேர்தலில், இதுவரை முடிவுகள் வெளியான 102 கவுன்சில்களில் 48 எண்ணிக்கையுடன் தொழிற்கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தொழிற்கட்சி தொடர்ந்து ஆதிக்கம்
பிரித்தானியாவில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. மொத்தமுள்ள 107 கவுன்சில்களில் இதுவரை 102 முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதில் 48 கவுன்சில்களை தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது. 5 கவுன்சில்களை கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் டெமாக்கிரஸ் கட்சி 12 கவுன்சில்களையும் கைப்பற்றியுள்ளது.
இதுவரை வெளியான முடிவுகளில் தொழிற்கட்சி 1026 ஆசனங்களையும், லிபரல் டெமாக்கிரஸ் கட்சி 500 ஆசனங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 468 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கிரீன் கட்சி கவுன்சில் எதையும் கைப்பற்றாத நிலையில் 158 ஆசனங்களை வென்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 371 ஆசனங்களை கன்சர்வேட்டிவ் கட்சி தங்கள் வசமிருந்து இழந்து கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது.
ஆனால் தொழிற்கட்சி கடந்த உள்ளாட்சித் தேர்தலை விடவும் இதுவரை 204 ஆசனங்கள் அதிகமாக கைப்பற்றியுள்ளது.
மேயர் தேர்தல் முடிவுகள்
சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட ஏனைய கட்சியினர் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், 5 ஆசனங்கள் குறைவாகப் பெற்று இதுவரை 265 ஆசனங்களுடன் உள்ளனர். இதனிடையே மேயர் தேர்தல் முடிவுகளும் மிக விரைவில் வெளியாகும் என்றே நம்பப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சி தங்களின் முதன்மையான ஆசனங்களை இழந்து பின்னடைவை சந்திக்கும் என்றால் அது பிரதமர் ரிஷி சுனக்கின் பதவிக்கு வேட்டு வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |