பிரித்தானியா உள்ளாட்சி தேர்தலில் 319 ஆசனங்களுடன் தொழிற்கட்சி ஆதிக்கம்: ரிஷி சுனக் கட்சி கடும் பின்னடைவு
பிரித்தானியா உள்ளாட்சி தேர்தலில், இதுவரை முடிவுகள் வெளியான 35 கவுன்சில்களில் 18 எண்ணிக்கையுடன் தொழிற்கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தொழிற்கட்சி 18 கவுன்சில்கள்
பிரித்தானியாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. மொத்தமுள்ள 107 கவுன்சில்களில் இதுவரை 35 முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 18 கவுன்சில்களை தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது.
3 கவுன்சில்களை கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆனால் லிபரல் டெமாக்கிரஸ் கட்சி 4 கவுன்சில்களை வென்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் தொழிற்கட்சி 319 ஆசனங்களையும், லிபரல் டெமாக்கிரஸ் கட்சி 114 ஆசனங்களையும், கன்சர்வேடிவ் கட்சி 117 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கிரீன் கட்சி 21 ஆசனங்களையும் வென்றுள்ளது. இதுவரை 122 ஆசனங்களை கன்சர்வேடிவ் கட்சி இழந்து கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் தொழிற்கட்சி கடந்த உள்ளாட்சி தேர்தலை விடவும் 52 ஆசனங்கள் அதிகமாக கைப்பற்றியுள்ளது.
அதிர்வலைகளை ஏற்படுத்தும் வெற்றி
சுயேட்சை வேட்பாளர்கள் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், 39 ஆசனங்கள் அதிகமாக பெற்று 65 பேர்கள் வென்றுள்ளனர். வார இறுதி நாட்கள் முழுவதும் வாக்கு எண்ணிக்கை முன்னெடுக்கப்பட இருப்பதால், பிரதமர் ரிஷி சுனக் தங்களது கட்சியின் வெற்றி வாய்ப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தொழிற்கட்சியின் அதிரடி வெற்றியை அதிர்வலைகளை ஏற்படுத்தும் வெற்றி என Keir Starmer கொண்டாடியுள்ளார். மட்டுமின்றி, Blackpool South இடைத்தேர்தலில் தொழிற்கட்சி வென்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |