இங்கிலாந்தில் பை ஒன்றுடன் மக்களை அணுகிய மர்மப் பெண்: பலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு
இங்கிலாந்தின் பரபரப்பான சந்தைவெளி ஒன்றில், பெண்ணொருவர் பை ஒன்றுடன் மக்களை அணுக, சிறிது நேரத்தில் பலருக்கு மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அது ரசாயனத் தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பை ஒன்றுடன் மக்களை அணுகிய மர்மப் பெண்
இங்கிலாந்திலுள்ள Bath என்னும் நகரில் பரபரப்பாக காணப்படும் கடைகள் நிறைந்த தெரு Stall Street ஆகும்.
Credit: oshunsprite / X
நேற்று மதியம், 2.30 மணியளவில் பெண்ணொருவர் கையில் பை ஒன்றுடன் அங்கிருந்தவர்களை அணுகியுள்ளார். சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது.
பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, உடனே அங்கு ஏராளமான ஆம்புலன்ஸ்களுடன் மருத்துவ உதவிக்குழுவினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
Credit: SWNS
ரசாயனத் தாக்குதல் என சந்தேகம்
உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Credit: SWNS
கொரோனா காலகட்டத்தில் அணிந்ததுபோல உடல் முழுவதும் மறைக்கும் வகையில் பாதுகாப்பு உடை அணிந்த மருத்துவ உதவிக்குழுவினர், பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டோரின் உடைகளை அகற்றி அவர்கள் மீது தண்ணீரை பாய்ச்சியுள்ளனர்.
இது ரசாயனத் தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. பையுடன் மக்களை அணுகிய அந்த மர்மப் பெண் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |