பிரித்தானியா மக்கள் பலரின் எதிர்பார்ப்பிற்கு விடை கிடைத்தது! புதிய சுகாதார செயலாளர் சொன்ன முக்கிய தகவல்
பிரித்தானியாவில் ஊரடங்கு இப்போதைக்கு முடிவுக்கு வராது, ஆனால் அடுத்த மாதம் 19-ஆம் திகதி முடிவு வரும் என்று நம்புவதாக புதிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் சுகாதார செயலாளரான இருந்த Matt Hancock, தன்னுடைய பெண் உதவியாளரிடம் நெருக்கமாக இருந்தது தொடர்பான வீடியோ வெளியானதால், தன்னுடைய பதவியை ராஜினா செய்தார். அவர் பதவியை ராஜினிமா செய்த சில மணி நேரங்களில், புதிய சுகாதார செயலாளராக Sajid Javid நியமிக்கப்பட்டார்.
புதிய சுகாதார செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், இன்று House of Commons-ல் அவர் பேசினார். அப்போது கொரோனாவை முற்றிலும் அழிப்பது என்பது யதார்த்தம் கிடையாது.
அதே சமயம், அந்த கொரோனாவுடன் நாம் எப்படி வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற வழியை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும், இடையில் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கு வாய்ப்புகள் கிடையாது.
அதே சமயம் அடுத்த மாதம் ஜுலை 19-ஆம் திகதி திட்டமிட்டப்படி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் மக்கள் ஒரு புதிய பயணத்தை துவங்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் முடிந்த வரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்வோம். அதற்கு வரும் ஜுலை 5-ஆம் திகதி சரியான நாளாக இருக்கும் என்று கூறியுள்ளார், ஏனெனில் அன்றைய நாளின் போது பிரித்தானியாவில் கொரோனா நிலை எப்படி இருக்கிறது என்பது தொடர்பான ஆய்வு நிலவரம் தெரியவரும் என்பதால், அவர் இப்படி கூறியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.