நாளை தொடங்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்..நியூசிலாந்து அணிக்கு விழுந்த அடி
வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாகியுள்ளது.
லாக்கி பெர்குசன்
சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. கராச்சியில் தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் (Lockie Ferguson) விலகியுள்ளார்.
காயம் காரணமாக அவர் விலகியதால் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைல் ஜேமிசன்
65 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பெர்குசன் 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
33 வயதான அனுபவம் வாய்ந்த அவர் இடம்பெறாதது அணிக்கு பெரும் பின்னடைவையாக பார்க்கப்படுகிறது.
அவருக்கு பதிலாக 13 போட்டிகளால் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கைல் ஜேமிசன் (Kyle Jamieson) விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |