வாக்குசாவடியை விட்டு வெளியேறினார் நயினார் நாகேந்திரன்: தொடர்ந்து பின்னடைவு
வாக்கு வித்தியாசம் அதிகரித்ததை தொடர்ந்து திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்கு மையத்தை விட்டு வெளியேறினார்.
நாடாளுமன்ற தேர்தல்-2024
உலகமே எதிர்பார்த்து வந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 இடங்களிலும், I.N.D.I.A கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
மனமுடைந்து வெளியேறிய நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என தமிழக பாஜக வாக்குப்பதிவின் போது தொடர்ந்து தெரிவித்து வந்தது.
அதிலும் கோவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
இதையடுத்து பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என தெரிவித்ததுடன் மனமுடைந்து வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |