தடுமாறும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - திமுக கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், திமுக கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்
கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
குறித்த தேர்தலின் இறுதி முடிவானது இன்று வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில், பாஜக 243 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 98 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.
பல தொண்டர்களும் கொண்டாடி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் திமுக கட்சி தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! @mkstalin @CMOTamilnadu @Udhaystalin #ElectionsResults #India #TamilNadu #Victory pic.twitter.com/Tz3puzXD0D
— Kamal Haasan (@ikamalhaasan) June 4, 2024
தடுமாறும் மக்கள் நீதி மய்யம்
2021 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிகராக இருந்த பாஜக தற்போது தனித்து போட்டியிட்டு தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி போன்ற இதர கட்சிகளும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
சினிமா துறையில் தற்போது கவனம் செலுத்தி வரும் நடிகர் கமல்ஹாசன் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை ஆரம்பித்து போட்டியிட தயாராகி வருகிறார்.
பாஜக கட்சி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள நிலையில், மக்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மக்களவை தேர்தல் போல திமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து கமல் ஹாசன் தேர்தல் பணி செய்தால், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தமிழக மக்கள் மறந்து விடுவார்கள். இனி கமல் ஹாசனின் தேர்தல் எதிர்கால திட்டம் என்ன என்றும் மக்கள் நீதி மய்யம் தடுமாறி வருதாகவும் கருத்து வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |