நடிகர் சந்தானத்துடன் பல படங்களில் நடித்துள்ள லொள்ளு சபா மாறன் இறந்துவிட்டதாக பரவிய தகவல்! உண்மை என்ன?
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ள மாறன் தான் நலமுடன் இருப்பதாக கூறி வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
நேற்று காலை பிரபல நகைச்சுவை நடிகர் மாறன் என்கிற மணிமாறன் தனது 48-வது வயதில் கொரோனா பாதிப்பால் காலமானார்.
கில்லி, டிஸ்யூம், தலைநகரம்', பாஸ் என்கிற பாஸ்கரன், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் சில அச்சு மற்றும் வலைதள ஊடகங்கள் மாறனின் மரண செய்தியில், மற்றொரு நகைச்சுவை நடிகரான லொள்ளு சபா மாறனின் புகைப்படத்தை தவறாக வெளியிட்டன.
இதனால் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கவலையில் ஆழ்ந்தனர். 'லொள்ளு சபா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான மாறன், சந்தனத்த்துடன், தில்லுக்கு துட்டு 2, ஏ 1, பச்சகுதிர போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து தான் இறந்ததாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், தான் நலமாக இருப்பதாகவும், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காலத்தில் மக்கள் தங்களை தீவிரமாக கவனித்துக் கொள்ளும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.