லண்டனில் குழந்தையின் உருவ பொம்மையுடன் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண்கள் கைது
லண்டனில் சனிக்கிழமை நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ரத்த வெள்ளத்தில் இறந்த குழந்தையின் உருவ பொம்மையை அணிவகுத்து சென்ற இரண்டு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இந்த பெண்கள், லண்டனின் டிராஃபல்கர் சதுக்கத்தில் நடந்த இன வெறுப்பைத் தூண்டும் செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் .
அவர்கள் ஒரு பாரிய பாலஸ்தீனிய கொடியிலிருந்து இரத்தம் தோய்ந்த குழந்தை போன்ற உருவ பொம்மையை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த மூன்று வார இறுதிகளில் இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் பெரும் போராட்டங்கள் நடந்தன.
சனிக்கிழமை "காசா, படுகொலையை நிறுத்து" மற்றும் "பாலஸ்தீனத்தை விடுவிக்கவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்டவும்" போன்ற பலகைகளை ஏந்தியபடி மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேரணியில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து, இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |