இந்தியாவுக்கு செம வாய்ப்பு... அடுத்த டெஸ்ட் போட்டி மைதானம் இப்படி தான் இருக்க போகுதாம்! கசிந்த தகவல்
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி, இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா 1-1 என்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், வரும் 2-ஆம் திகதி நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மைதானம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தான் மைதானம் அமைக்கப்பட்டிருந்தது.
ஹெட்டிங்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து அதன் பின்னரே பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. இந்நிலையில், வரும் 2-ஆம் திகதி நடைபெறவுள்ள ஓவல் மைதானத்தின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இரு அணிகளிலும் குறைந்தது 2 சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்திய அணி இந்த முறை அஸ்வினை நிச்சயம் களம் இறக்கும்.
அப்படி மைதானம் மட்டும் சுழற்பந்து வீச்சு சாதகமாக மாறினால், இந்தியாவின் வெற்றி உறுதி.
அதே சமயம் லண்டனில் தற்போது நல்ல வெயில் அடித்து வருகிறது. ஒருவேளை மழைப்பொழிவு ஏற்பட்டால் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக நன்கு ஸ்விங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.