லண்டனில் பிரபல நடிகை தீ விபத்தில் மரணம்
லண்டனில் பிரபல பிரித்தானிய நடிகை Anna Karen தனது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிழக்கு லண்டனில் Ilford பகுதியில் உள்ள Windsor சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், பழம்பெரும் நடிகை Anna Karen-ன் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அப்போது, வீட்டுக்குள் சென்று பார்த்த வீரர்கள் நடிகை Anna Karen-ஐ சடலமாக வெளியே கொண்டுவந்தனர். மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக உறுதிசெய்தனர்.
70-களில் புகழ்பெற்ற நடிகையாக வளம் வந்த Anna Karen, 1936-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அவர் தனது 17-வது வயதில் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். லண்டனுக்குச் சென்ற பிறகு அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் சேர்ந்து நடிப்பை பயின்றார்.
1961-ஆம் ஆண்டில், அவர் நேச்சரிஸ்ட் திரைப்படமான Nudist Memories மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1967-ல் Ken Loach-சின் திரைப்படமான Poor Crow-ல் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். பின்னர், 1969-ல் Carry on Camping-ல் Barbara Windsor-உடன் நடித்தார்.
பின்னர், பிரிட்டிஷ் காமெடி திரைப்படமான On the Buses மூலம் புகழ்பெற்றார். கேரன் 1967-ல் நகைச்சுவை நடிகர் Terry Duggan மணந்தார், மேலும் அவர் இறக்கும் வரை வின்ட்சருடன் நட்பாக இருந்தார்.
கடந்த ஜனவரியில் வின்ட்சரின் இறுதிச் சடங்கில் அவர் தனது கடைசியாக பொதுவெளியில் தோற்றமளித்திருந்தார். அவரது மரணம் தற்போது பிரித்தானியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.