லண்டன் விமானநிலையத்தில் 28 வயது இளைஞன் அதிரடி கைது! தெரியவந்த காரணம்
லண்டன் விமான நிலையத்தில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
வடக்கு லண்டனின் Wood Green-ல் உள்ள Green Lanes-ல் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே 22 வயது மதிக்கத்தக்க இளைஞன் கடந்த மாதம் 21-ஆம் திகதி அடையாளம் தெரியாத மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் பின் உயிரிழந்த நபரின் பெயர் Sharmake Mohamud எனவும் 22 வயது மதிக்கத்தக்க இவர் Newham-ஐ சேர்ந்தவர் என்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
சம்பவ தினத்தன்று இரவு உள்ளூர் நேரப்படி 10.30 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, Sharmake Mohamud இரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த் நிலையில், இன்று Heathrow விமானநிலையத்தில் 28 வயது மதிக்கத்தக்க நபரை இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த மாதம் 22-ஆம் திகதி இதே கொலை வழக்கு தொடர்பாக 20 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தலைமை தாங்கும், Wayne Jolley(DCI) கூறுகையில், இந்த கொலை ஒரு மிருகத்தனமானது.
இந்த சம்பவத்தால் அந்த இளைஞனின் குடும்பம் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளதாக கூறினார்.
மேலும், சட்டகாரணங்களுக்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.