லண்டனில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணி: பொலிஸார் முகத்தில் குத்திய வன்முறையாளர்கள்
லண்டனில் சனிக்கிழமை தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் நடத்திய பேரணியில் 110,000 முதல் 150,000 வரை கலந்து கொண்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
டாமி ராபின்சன் இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் நிறுவனராகவும், பிரித்தானியாவின் தீவிர வலதுசாரிகளின் முக்கிய நபராகவும் விளங்கி வருகிறார்.
இவர் நடத்திய இந்த “யுனைட் தி கிங்டம்” என்ற குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களை கூட்டியிருந்தார்.
More than 100,000 anti-immigration protesters rally in central London https://t.co/T8GEzx7BAc pic.twitter.com/BRZwRb1THu
— Reuters (@Reuters) September 13, 2025
தாக்கப்பட்ட பொலிஸார்
இந்த பேரணியின் போது எதிர்ப்பாளர்களின் சிலர் பகுதியினர் பொலிஸ் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.
சிலர் பொலிஸாரின் முகத்தில் குத்தி, உதைத்து பாட்டில்களை மேலே வீசித் தாக்கியுள்ளனர்.
இதில் 26 பொலிஸ் அதிகாரிகள் வரை படுகாயமடைந்துள்ளனர். அதில் நால்வருக்கு மூளை அதிர்ச்சியும், எலும்பு முறிவுகளும் மற்றும் முதுகுத் தண்டில் காயமும் ஏற்பட்டுள்ளது.
பேரணியில் நடந்த வன்முறை மற்றும் குற்றவியல் நடைமுறையில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதவி ஆணையர் மாட் ட்விஸ்ட் வழங்கிய தகவலில், போராட்டத்தில் சில நபர்கள் மட்டும் வன்முறை நோக்கத்துடன் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |