போராட்டம் திரைப்படத்தால் அதிர்ந்த லண்டன் அரங்கம்.., நெகிழ்ந்த கந்தையா பாஸ்கரன்
போராட்டம் என்பது ஈழத்து கலைஞர்களின் உழைப்பில், உதைப்பந்தாட்ட வீரர் ஒருவனின் கதையை மையமாகக் கொண்டு ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவான ஒரு புதிய தமிழ்த் திரைப்படமாகும்.
இப்படம் அக்டோபர் 2, 2026 அன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் போராட்டம் திரைப்படம் உருவாகியுள்ளது.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார்.

பூவன் மதீசன் இசையமைத்துள்ள போராட்டம் திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஒரு திறமையான கால்பந்து வீரனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களையும் அவனது லட்சியப் பயணத்தையும் இப்படம் பேசுகிறது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படம், ஈழத் தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், லண்டன் அரங்கில் போராட்டம் திரைப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் நெகிழ்ந்து பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |