லண்டனில் பீர் மதுபானங்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு! முழு தகவல்
லண்டனில் பீர் மதுபானங்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.
Financial Times வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு pint பீரின் விலை தற்போது £8 ஆகும் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 3,608). பிரித்தானியாவில் கடந்த 2008ல் இருந்து பீரின் விலை 70% என்ற அளவில் உயர்ந்துள்ளது.
தொழில்துறை கண்காணிப்பாளரான CGA இன் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பிரித்தானியாவில் ஒரு pint பீரின் சராசரி விலை 2008 இல் £2.30 ஆக இருந்ததில் இருந்து இந்த ஆண்டு £3.95 ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைனில் நடந்த போரினால் உருவான அழுத்தங்களால் பீர் தயாரிக்கும் பார்லியின் விலை அதிகமாக இருப்பதால், மதுபான விடுதிகள் விலையை மேலும் உயர்த்த வேண்டியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பீர் விற்பனை அளவு 0.7 சதவீதம் குறைந்துள்ள நிலையில், அவற்றின் மதிப்பு 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, வாடிக்கையாளர்கள் பீர் மதுபானத்தை சற்றே குறைவாக அருந்துவதை காட்டுகிறது.
அதன்படி ஆரோக்கியம் குறித்து நுகர்வோர் மத்தியில் ஏற்பட்ட அக்கறையால் ஆல்கஹால் இல்லாத மது மற்றும் குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுவின் விற்பனையை அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் ஆல்கஹால் அல்லாத பீர் அல்லது குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் அருந்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.