லண்டனில் புலம்பெயர்ந்தவர் இறந்து கிடந்த அதே இடத்தில் மீண்டும் கிடைத்த உடல்! வெளிவரும் தகவல்கள்
லண்டனில் உள்ள குளம் அருகே ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு லண்டனின் Leytonstoneல் உள்ள Hollow Pondsக்கு வருமாறு நேற்று முன் தினம் பொலிசாருக்கு அவசர தகவல் வந்தது. இதையடுத்து அங்கு பொலிசார் விரைந்த நிலையில் ஆண் ஒருவர் அசைவற்ற நிலையில் இருந்தார்.
மருத்துவ குழுவினரும் அங்கு இருந்த சூழலில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது வரையில் இது விவரிக்க முடியாத மரணம் என்றே பொலிசாரால் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2015ல் துருக்கி நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த நபர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பின்னாளில் அவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.