லண்டன் பெருநகரங்களில் பெருகும் 100 நாள் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
அதிகமாக தொற்றும் தன்மை கொண்ட 100 நாள் இருமல் என அறியப்படும் whooping cough லண்டன் பெருநகரங்களில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபத்தான 100 நாள் இருமல்
தற்போது எந்த பகுதிகளில் இந்த ஆபத்தான 100 நாள் இருமல் அதிகம் பரவியுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இதுவரை 1,141 பேர்கள் whooping cough எனப்படும் 100 நாள் இருமலுக்கு இலக்காகியுள்ளனர்.
@getty
இது கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகம் என்றே கூறப்படுகிறது. இந்த இருமலானது சளித் தொல்லை போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, கடுமையான இருமலுக்கு கொண்டு செல்லும் என்றே கூறுகின்றனர்.
இந்த இருமல் 3 மாதங்கள் வரையில் நீடிக்கும் என்பதாலையே 100 நாள் இருமல் என அழைக்கப்படுகிறது. கோடைகாலம் தொடங்கியதும் நோய்த்தொற்றுகள் மூன்று மடங்காக அதிகரித்து, கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 716 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 230 சதவீதம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. லண்டன் பெருநகரமான Hackney-ல் தான் இந்த ஆண்டு இதுவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வேறு எங்கும் இல்லாத எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
NHS எச்சரிக்கை
Hackney-ல் 100 நாள் இருமலுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 77 என்றே தெரியவந்துள்ளது. Wirral பகுதியில் 35 பேர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. Leeds (30) மற்றும் Birmingham (30) என்றும் கூறப்படுகிறது.
@getty
ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த 100 நாள் இருமல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், 100 நாள் இருமலானது ஆபத்தானது என்று NHS எச்சரிக்கை விடுத்துள்ளது,
குறிப்பாக ஆறு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நீரிழப்பு, சுவாசிப்பதில் சிரமம், நிமோனியா மற்றும் வலிப்பு நோய் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், வயதான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு, இருமலின் போது விலா எலும்புகளில் புண், குடலிறக்கம், காது தொற்று போன்ற பிரச்சினைகளை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |