பிறந்தநாளில் தெருவில் குற்றுயிராக மீட்கப்பட்ட லண்டன் சிறுவன்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
லண்டனில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு, மரணமடைந்த சிறுவனின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவயிடத்திலேயே சிறுவன் மரணம்
ப்ரெண்டில் உள்ள கிரான்வில்லி சாலை அருகே ஜூலை 14ம் திகதி 17 வயதான Claudyo Jauad Lafayett என்பவர் பொலிசாரால் குற்றுயிராக மீட்கப்பட்டார்.
@UKNIP
ஆனால், அவசர மருத்துவ ஊழியர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போகவே, சம்பவயிடத்திலேயே சிறுவன் மரணமடைந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட உடற்கூறு ஆய்வில் சிறுவனின் அடிவயிற்றில் கத்தியால் தாக்கப்பட்ட காயம் காரணமாகவே மரணம் நேர்ந்ததாக தெரியவந்தது. சம்பவயிடத்தில் இன்னொரு 17 வயது சிறுவனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட, குறித்த நபர் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசாரித்து வருவதாக பொலிசார்
இவர்களுடன் 20 வயது பெண் ஒருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், ஜூலை 15ம் திகதி கொலை வழக்கு தொடர்பில் 18 வயது இளைஞரை கைது செய்தனர்.
@UKNIP
அவர் பிணையில் வெளிவர, மேலும் இரு 18 வயது இளைஞர்கள் கைதாகி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் உண்மையான பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |